இரண்டு நாட்களுக்கு பல்கலைக்கழக புறக்கணிப்பை மேற்கொள்ள இருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகத்துக்குஇ தமிழ் இளையோர் அமைப்புகள் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன.

இன்றில் (22/05/14) இருந்து இரண்டு நாட்களுக்கு பல்கலைக்கழக புறக்கணிப்பை மேற்கொள்ள இருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகத்துக்கு, தமிழ் இளையோர் அமைப்புகள் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன. பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் துணிவுடன் யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் விரிவுரையாளர்களும் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 5ஆம் ஆண்டு நினைவுநாளை நினைவுகூர்ந்துள்ளனர். மேற்படி முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வைத் தடுக்கும்முகமாக மூடப்பட்ட யாழ். பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்பட்டபோது நூற்றுக்கணக்கான மாணவர்களும் ஆசிரியர்களும் பொதுமண்டபத்தில் ஒன்றுகூடி இறுதிப் போரின்போது கொல்லப்பட்டோருக்கு வணக்கம் செலுத்தினர். இன …

தலைமுறை தாண்டும் தமிழீழப் போராட்டம்

ஆண்டாண்டு காலமாக எமது இருதய பூமியான தமிழீழத்தில் தமிழினம் வாழ்ந்து வருவதாக சரித்திரம் சொல்கிறது. ஆனால் இன்றைய நிலையில் தமிழினம் ஒரு அநாதை இனமாக மாற்றப்பட்டிருக்கிறது. நமக்கென்று ஒரு நாடில்லை வீடில்லை அத்தோடு மொழி, கலை பண்பாட்டுச் சுதந்திரம் இல்லை. இவைகளெல்லாம் ஒரு காலத்தில்கொடிகட்டிப் பறந்தது நம் தேசத்தில். இப்போது இனவெறியால் எல்லாமே நாசமாக்கப்பட்டுக் கொண்டிருக்குறது. தமிழினத்திற்கு எதிரன இனப்படுகொலை எப்போதே ஆரம்பிக்கப் பட்டுவிட்டது. நாமெல்லாம் பிறப்பதற்கு முன்பே திட்டமிடப்பட்டு இப்பொழுதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.   கடந்த …

லண்டனில் பேரெழுச்சியுடன் இடம்பெற்ற தமிழீழ மாணவர் எழுச்சி நாள்

பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு ஒருங்கிணைப்பில் இன்று ஞாயிறு 23 அம் திகதி அன்று பொன் சிவகுமாரன் அண்ணாவின் 39 அவது நினைவு நாளையொட்டி இல 10 பிரித்தானிய பிரதமரின் வாசல்தலத்திற்கு வெளியில் நடந்த நிகழ்வஞ்சலியிலும் போராட்டத்திலும் நூற்றுக்கணக்கான மாணவர்களும் மக்களும் கலந்து கொண்டனர். தமிழ் மக்கள் மீது இலங்கை அரசால் நடாத்தி வரும் இனப் படுகொலையை தடுக்கும் விதமாக நடவடிக்கைகள் எடுக்கக் கூறி மாணவர்கள் இந்த ஆர்பாட்டத்தை நடத்தினர். ஈழ மக்கள் இனப்படுகொலை பற்றிய சுயாதீன …

லண்டனில் ஆர்பாட்டம் நடத்திய ஈழத்தமிழர்கள் மீது சிங்கள வெறியர்களின் தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றது .

லண்டனில் ஆர்பாட்டம் நடத்திய ஈழத்தமிழர்கள் மீது சிங்கள வெறியர்கலளின் தாக்குதலை தமிழ் இளையோர் அமைப்பு – ஐக்கியராச்சியம் வன்மையாக கண்டிக்கின்றது. லண்டனில் சிறிலங்கா துடுபெடுத்தாட்ட அணியைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தியும் மற்றும் சிறிலங்காவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழர்கள் மீதான இன அழிப்புக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டியும் 17/6/13 லண்டன் வாழ் ஈழத்தமிழர்களால் லண்டன் Oval மைதானத்தில் ஆஸ்திரேலியாவிற்கும், சிறிலங்காவிற்கும் இடையில் துடுபெடுத்தாட்ட போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது மைதானத்திற்க்கு முன்பாக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் நிகழ்த்தப்பட்டது. சிறிலங்கா …

தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவு

  இத்தனை காலமாக புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர் எவ்வளவோ போராட்டங்கள் செய்து வந்த போதிலும் தாய் தமிழ் நாடு மக்கள் அமைதியாகவும் பாராமுகமாகவும் இருந்தது ஒரு குறையாகவே இருந்து வந்தது. எங்கள் அவலத்தை பற்றிய விழிப்புணர்வோ அதை ஒட்டிய எழுச்சியோ கோடி கணக்கிலுள்ள தாய் தமிழ் நாட்டு மக்கள் இடையில் இல்லாமை என்பது ஏமாற்றத்தையே இத்தனை காலமும் தந்தது. ஆனால் அக்குறையை தீர்த்து தமிழ் நாடு முழுவதும் ஈழ உணர்வு பற்றி எரியும் பொருட்டு …

பருதி அண்ணா அவர்களுக்கு வீரவணக்கம்

நவம்பர் 10, 2012 எண்பதுகளில் தொடங்கி இற்றை வரை தனது வாழ்நாளில் தேசியத்துக்காக உழைத்த ‘பருதி‘ என்று அழைக்கப்படும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்கு குழுவின் பொறுப்பாளர் திரு. நடராஜா மதீந்திரன் அவர்கள் சென்ற வியாழக்கிழமை, நவம்பர் 08, 2012 அன்று பிரான்சின் பாரீஸ் நகரில் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தி எம்மைத் துயரில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் புலம்பெயர் தேசமும் இன்று கண்ணீரில் மூழ்கியுள்ளது. மே மாதம் 2009 க்கு பிறகு புலம்பெயர் தேசத்தில் தமிழ் மக்களின் எழுச்சி என்பது …

முள்ளிவாய்க்காள் 3 ஆம் நினைவில் விடுதலைத் தீயை ஏந்தி நினைவு வணக்கம்

இன்றைய நாளில் தமிழின படுகொலை நடந்து மூன்று வருடங்கள் கடந்த நிலையில், நம் மனதில் நாம் சுமந்துகொண்டிருக்கும் அதன் வலியையும், இன்றும் எம் மண்ணும், மக்களும் அனுபவிக்கும் மாறாத காயங்களையும் நினைத்தும், நெஞ்சில் இன்றும் என்றும் விடுதலைத் தீயை ஏந்தி நினைவு வணக்கம் செலுத்தும் நாங்கள் தமிழ் இளையோர். மூன்று வருடங்களுக்கு முன் தமிழ் இனம் என்றுமே காணாத ஒரு பேரழிவை சந்தித்திருநத நாள், கொத்துகுண்டுகள் மற்றும் பாரிய ஆயதங்கள் கொண்டு எம்மினத்தை பாதுகாப்பு வலயம் என்று …

யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் செயலார் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்குறோம்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நினைவுகொள்ளும் இவ் வேளையில் ஒரு மிருகத்தனமான தாக்குதலை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தமிழ் மாணவன் மீது நடத்தப்பட்டுள்ளது. பரமலிங்கம் தர்சானந் கலை பிரிவில் மூன்றாம் ஆண்டு கல்வியையும் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார், இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினால் இயக்கப்படும் ஒரு கும்பல் மூலம் இரும்பு கம்பிகள் கொண்டு தாக்கப்பட்டு தலையில் காயங்களுடன் தீவிர மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தனது சக மாணவர்களுடன் இணைந்து இலங்கை இராணுவத்தின் தடைகளைகளை மீறி …

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மீது திட்டமிட்ட தாக்குதல்

யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் மாணவ மன்றத் தலைவர் திரு தவபாலன், 24 வயது, 16/10/2011 அன்று பிற்பகல் 2 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதர்கள் பலமான தாக்குதல் நடாத்தி இருக்கின்றார்கள். இலங்கை ராணுவமும் அதனுடன் இயங்கும் அதன் ஒட்டுண்ணிகளும் என சந்தேகிக்கப்படும் இவர்கள் திரு தவபாலனை பின் தொடர்ந்து சென்று கூர்மையான இரும்புக் கம்பிகளால் யாழ்ப்பாணம் கந்தர்மடம் அருகே இவ் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டிருக்கின்றார்கள். திரு தவபாலன் அவர்கள் கிரிஸ் மனித அச்சுறுத்தலுக்கு …

சிறீலங்கா கிறிக்கெட்டைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் – குழப்பம் விளைவிக்க முயன்ற சிங்களவர்கள்

தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறீலங்கா அரசாங்கத்தின் கிறிக்கெட் அணியைப் புறக்கணிக்குமாறு கோரி பிரித்தானிய தமிழ் இளையோர் நேற்று (28-06-2011) லண்டன் ஓவல் மைதானத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். காலை 11:00 மணிமுதல் கிறிக்கெட் பார்க்கச் சென்ற மக்கள் மத்தியில் துண்டுப் பிரசுரங்களை இளையோர்கள் வழங்கல் செய்துகொண்டிருக்க, இளையோர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக மாலை 5:00 மணி முதல் மக்களும் இணைந்து கொண்டனர். தமிழீழத் தேசியக் கொடியைத் தாங்கியவாறு பிரித்தானிய தமிழ் இளையோர்கள் துண்டுப் பிரசுரங்களை வழங்கிக்கொண்டிருந்தபோது அங்கு …