Press Release Tamil

வரலாற்றில் மறக்க முடியாத மாதமாக வைகாசி மாதம்

வரலாற்றில் மறக்க முடியாத மாதமாக வைகாசி மாதம் உள்ளது. முள்ளிவாய்க்காள் இனப்படுகொலை முடிந்து ஆறு வருடம் ஆகின்றது. இன்னும் எங்களுடய மக்களின் அழுகுரல்கள் கேட்டவண்ணமே இருக்கின்றது. இன்று இலங்கையின் இனவெறிப் போரால் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்க்கும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. சிங்கள அரசாங்கத்தின் கண்களில் எங்கள் அப்பாவி மக்கள் இன்னும் தீண்டத்தகாதவர்களாக தெரிகின்றனர். தமிழ் தேசம் இழந்த மக்களை நினைவுகூறும் உரிமையை மறுத்து விட்டு , சிங்கள தேசம் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறது.

2009தில் புலம் பெயர்ந்து வாழும் ஈழ தமிழ் உறவுகள் தாங்கள் வசிக்கும் நாடுகளில் பெரும் போராட்டங்களை முன் எடுத்து இருந்தனர். தாயகத்தில் இருந்தும் வெளிநாடுகளிடம் உதவிக்கான குரல் எழுப்பப் பட்டது. தமிழ் மக்களுடைய உதவிக்கான குரல்கள் முற்றிலுமாக மறுக்கப்பட்டது.

ஆறு தசாப்தங்களாக நடந்து வரும் விடுதலை போரட்டத்திற்கு அடிப்படை காரணங்களாக இருந்த அரசியல் உரிமை மறுப்பு, சிங்கள குடியேற்றங்கள், இராணுவ மயமாக்கல், தமிழ் பட்டதாரிகளுக்கான வேலை மறுப்பு, தமிழ் மாணவர்களுக்கான கல்வி மறுப்பு ஓயாது சிங்கள ஆட்ச்சியாளர்களால் தமிழ் மக்கள்மேல் திணிக்க பட்டுவருகின்றது. திட்டம் இட்ட தமிழ் இன அழிப்பை சிங்கள ஆட்ச்சியாளர்கள் 1948இல் இருந்து இடை விடாமல் முன்னெடுத்து வருகின்றனர்.

எத்தனை சிங்கள ஆட்சி மாறினாலும் தமிழர்களுக்கு மேலான அடக்குமுறை ஓய்வதில்லை, இது வரலாறு கண்ட உண்மை. உலக வல்லரசு சக்திகளும் இலங்கையை போல் நீதி தருவதாக ஏமாற்றத்தையே தந்து நிற்கின்றது. இன்றும் ஐ.நா விசாரணை, ஐ.நா அறிக்கை என்று ஐ.நாவும் பூலோக அரசியலுக்கு ஏற்ப தன்னுடைய காய்நகர்த்தல்களை முன்னெடுத்து வருகின்றது.

தமிழ் மக்களின் அரசியல் வலு மேலோங்குவதற்கு நாங்கள் மறுபடியும் வீதியில் இறங்கி போராடி ஆகவேண்டும். எங்கள் மக்கள் உரிமை போரட்டதிற்கு என்றும் பின் நின்றது இல்லை. “போராட்ட வடிவங்கள் மாறலாம்! ஆனால் இலக்கு மாறாது” என்ற தமிழீழ தேசிய தலைவரின் சொல்லிற்கு இணங்க அரசியல் போராடங்கள் முன் எடுக்கப்படவேண்டும். சமிப காலமாக இராணுவ அடக்குமுறைகள் இருந்தும் மாணவர்கள் மற்றும் மக்கள் செய்த போராடங்கள் ஒரு உந்து சத்தியை தருகின்றது. இளையோர்கள் ஆகிய நாங்கள் புலத்தில் இருந்து, தாயாக மக்களின் போராட்டத்தை வலுபடுத்த தேவையான அனைத்து முயற்சிகளை எடுப்போம் என்பதை உறுதியாக கூறிக்கொள்கின்றோம் அத்தோடு தாயக மண்மீட்புபோரில் மாண்ட மறவர்களுக்கும் மக்களுக்கும் எங்களது அஞ்சலியை செலுத்திக்கொள்கின்றோம்

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

You may also like...

Popular Articles...