Remembering SENCHOLAI Massacre

The 14th of August 2006 is remembered as a dark day in Tamil history when the Sri Lankan government ordered an airstrike on an orphanage killing 53 school girls. This callous and ruthless act has gone unpunished, like many other war crimes committed by the Sri Lankan state, and is known as the Sencholai Massacre. This year marks 15 years since this tragic event and to remember the lives lost we organised a silent protest in the Parliament Square Garden with each person sitting down holding a board with one of the girls’ faces and names on along with a backpack.

We opted for this approach to symbolise how these innocent schoolgirls were silenced along with their education, hopes and dreams taken away from them. This was a successful way to educate the public too who curiously approached us to find out more about this gruesome event and were deeply shocked and saddened by the ruthlessness of this mass murder. Until we get the justice we will not stop protesting, we will not stop remembering and most importantly we will not give up on the Eelam that these girls lived for.

தமிழர் வரலாற்றில் 14 ஆகஸ்ட் (ஆவணி) 2006 ஒரு இருண்ட நாளாக நினைவு கொள்ளப்படுகின்றது. அன்று இனவாத சிறிலங்கா அரசாங்கம் செஞ்சோலை சிறுவர் இல்லம் மீது விமானத் தாக்குதல் நடத்தி 53 மாணவிகளை கொன்றார்கள். இந்த இரக்கமற்ற செயலும் பற்பல போர் குற்றங்கள் போல் தண்டிக்கப்படவில்லை, முதலுதவிக் கல்வியினை மேற்கொண்ட பள்ளி மாணவர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதலை அனைத்து நாடுகளும் கண்டித்தது. இந்நிகழ்வை நாம் செஞ்சோலைப் படுகொலை என்று ஒவ்வொரு வருடமும் நினைவு கொள்கின்றோம். இந்த சோகமான நிகழ்வு நடந்து 15 ஆண்டுகள் கடந்து விட்டன. அதனை நினைவு கூறும் விதமாக பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்திற்கு முன்னால் இளையோர் அமைப்பினால் ஒரு அமைதிபோராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

ஒவ்வொருவரும் ஒரு மாணவியின் படம் மற்றும் பெயருள்ள அட்டையைபிடித்துக்கொண்டு முதுகில் புத்தகப்பையுடன் அமர்ந்திருந்தார்கள். இதன் மூலம் அந்த அப்பாவி மாணவிகளின் கல்வி, நம்பிக்கைகள், கனவுகள் பறிக்கப்பட்டதை அடையாளப்படுத்த எண்ணிணோம். ஆரவமுள்ள பொதுமக்கள் போராட்டத்தை கண்டு இந்நிகழ்வை பற்றி அறிந்துகொள்ள எங்களை அணுகினார்கள். நடந்த இரக்கமற்ற படுகொலையை அறிந்ததும் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்கள். நீதி கிடைக்கும் வரை போராடுவதை நிறுத்த மாட்டோம், நினைவு கொள்வதை நிறுத்த மாட்டோம் முக்கியமாக இப்பெண்கள் வாழ்ந்த ஈழத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்.

You may also like...