முள்ளிவாய்க்காள் 3 ஆம் நினைவில் விடுதலைத் தீயை ஏந்தி நினைவு வணக்கம்

இன்றைய நாளில் தமிழின படுகொலை நடந்து மூன்று வருடங்கள் கடந்த நிலையில், நம்
மனதில் நாம் சுமந்துகொண்டிருக்கும் அதன் வலியையும், இன்றும் எம் மண்ணும்,
மக்களும் அனுபவிக்கும் மாறாத காயங்களையும் நினைத்தும், நெஞ்சில் இன்றும்
என்றும் விடுதலைத் தீயை ஏந்தி நினைவு வணக்கம் செலுத்தும் நாங்கள் தமிழ்
இளையோர்.

மூன்று வருடங்களுக்கு முன் தமிழ் இனம் என்றுமே காணாத ஒரு பேரழிவை
சந்தித்திருநத நாள், கொத்துகுண்டுகள் மற்றும் பாரிய ஆயதங்கள் கொண்டு
எம்மினத்தை பாதுகாப்பு வலயம் என்று கூறிவிட்டு அதனுள் வைத்து அழித்துக்கொண்ட
பேரவலம் நிகழ்ந்த நாள்..  போரை நிறுத்துங்கள் இனப்படுகொலையை நிறுத்துங்கள்
என்று உலகமெங்குமிருந்து தமிழரின் குரல்கள் வானத்தில் இருக்கும் முகில்களை
கிழித்துக்கொண்டு விண்ணில் ஒலித்தன.

எத்தனை எத்தனை தற்கொடைகள்

எத்தனை எத்தனை வீதி மறியல்கள்

இதே லண்டன் மாநகரில் தான் மூன்றுலட்சம் தமிழ் மக்கள் ஒன்று திரண்டார்கள்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீதிகளில் உறங்கினர்,

சிங்கள பேரினவாத அரசிற்கோ உலகத்திற்கோ எம் குரல் கேட்கவில்லை மாறாக எமது இனம்
முள்ளிவாய்க்காள் மண்ணில்  கொன்றொழிக்கப்பட்டது.

இலங்கை பேரினவாத அரசின் தமிழினப் படுகொலை முள்ளிவாய்க்காலோடு
முற்றுப்பெறவில்லை,

எமது மக்கள் முள்வேலி கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டார்கள்,
எமது சகோதரிகளின் கற்பு சூறையாடப்பட்டது,
சகோதர சகோதர்களின் கண்ணை கட்டி நிர்வாணமாக்கி சுட்டு கொல்லப்பட்டார்கள்

இவையாவும் ஊடகங்கள் மூலமாக வெளிஉலகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது, இவை தவிர
ஊடகங்களில் வாராத எத்தனையோ இனப்படுகொலைகள் தினம் தோறும் நடேந்தேறியுள்ளன
அதேபோல் நடந்துகொண்டும் இருக்கின்றன. பாளடைந்த கிணறுகளில் கைற்றில் கட்டிய
சடலங்கள் வெள்ளை வான் கடத்தல்கள் வழிபாட்டு தலங்களை இடித்தல் தமிழர்
சான்றுகள், வரலாற்று பதிவுகள், அனைத்தையும் சிங்கள மயமாக்குதல் அதோடு மட்டும்
நின்றுவிடாமல் சிங்கள மக்களை எமது தாயாக கரைபிரதேசங்கள் மற்றும் பொருளாதார
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் குடியமர்த்துதல், அரசாங்க
அதிபர்களாக சிங்கள அதிகாரிகளை எமது தாயாக பிரதேசங்களுக்கு நியமித்தல் அது
மட்டுமில்லாமல் எமது எதிர்கால சந்ததியினராகிய மாணவ சமுதாயத்தை சீர்கெடுத்தல்,
ஊர்வலங்கள் என்று சொல்லி மக்களை கட்டாயப்படுத்தி அழைத்துசெல்லல் என பல வேறு
உளவியல் தாக்கங்களை எமது மக்கள் மீது திணித்து அவர்களுக்கு சொல்லென்னா
துயரங்களை அளித்து வருகிறார்கள்.

எமது மக்கள் சுதந்திரமாக போரில் கொல்லப்பட்டவர்களை கூட நினைவு கூற விடாமல்
தடுப்பது, நினைவு தினம் ஒழுங்கு செய்பவர்களை கண்டறிந்து அவர்களை தாக்குதல்
அல்லது கடத்துதல் >> இதன் ஒரு அங்கமாக நேற்றைய தினம் யாழ் பல்கலைக்கழக மாணவ
தலைவர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டதும் மற்றும்  ஆலய மணிகள் மே 18 19 ஆம்
திகதிகளில் ஒலிக்க கூடாது என்று தடை விதிப்பதும் சான்று பயிலும்.

நந்திக்கடலோடு தமிழர்கள் அடக்கப்பட்டு விட்டார்கள், முள்ளிவாய்க்காலோடு
தமிழர்கள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என பறை சாற்றிகொள்கின்றது சிங்களம்…
அடங்குவோமா நாம்? அடக்கமுடியுமா எங்களை? எத்தனையோ ஆயிரம் வித்துக்களில்
இருந்து வேர்விட்டு தளிர் விட்டு மீண்டும் மீண்டும் முளைத்து பாரிய
விருட்சமாக பரவி நிற்கின்றோம். எமக்கு நீதி கிடைக்கும் வரை நாம் ஓய
போவதில்லை, எமது மக்களுக்கு சுதந்திரமான வாழ்வு கிடைக்கும் வரை நாம் உறங்க
போவதில்லை. அடக்கப்படும் இனம் என்றுமே அடங்கியதாக சரித்திரம் இல்லை, அவர்கள்
மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுந்து கொண்டே இருப்பார்கள்.

இலங்கையில் எத்தனை அரசாங்கங்கள் மாறினாலும் தமிழின விரோத போக்கு என்றும்
மாறியதில்லை தமிழர்களை அடக்கும் முறை மாறியதில்லை மாறாக எங்களது உரிமைகள்
பறிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. இத்தனை நடந்தும் உலகம் இன்னும் எமது
உணர்வுகளை புரிந்துகொள்ள தயங்குகின்றது, எத்தனை நாடுகள் சேர்ந்து சொன்னாலும்
சிங்களம் மாறபோவதில்லை எமது உரிமைகளை எமக்கு தரபோவதில்லை. எமக்கான
சுதந்திரமும் இறமையும் கொண்ட ஒரு தனி நாடே எம்மை பாதுக்கக்க வழிகோலுமே தவிர
இவர்கள் நினைக்கும் ஆட்சி மாற்றம் அல்லது தீர்வு திட்டங்கள் ஒன்றும்
தந்துவிடபோவதில்லை. உலகம் எமது குரல்களை செவிமடுக்க வேண்டும் எமது சுயநிர்ணய
உரிமைக்கு பக்கபலமாக இருக்கவேண்டும்.

இன்றும் இலங்கை அரசு, எம் மக்கள் நிம்மதியாக வாழ்வதாகவும், அவர்கள் சகல
உரிமைகளுடன் வாழ்வதாகவும், பொய்களையும், கட்டுக் கதைகளையும் கூறி தன்
போர்க்குற்றங்களில் இருந்து தப்பிபதற்கும், சர்வதேச சமுதாயத்தை ஏமாற்றும்
முயற்சிலும் ஈடுபட்டு வருகிறது இதனை உலக அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைய நாளில் தமிழ் இளையோராகிய நாம், எமது மக்களையும், தேசத்தையும், நினைவு
கூறும் வேளையில். எமக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்பையும், விடுதலை
போராட்டத்தையும் சுமந்து நிற்கின்றோம். எத்தனை இடர் வந்தாலும் தமிழ்
இளையோராகிய எம்மை எம் விடுதலைக்காக ஒற்றுமையுடன் போராடுவதை தடுக்க முடியாது
என்பதை சிங்களத்திட்கும், அவர்களுக்கு சார்பாக செயற்படும் சக்திகளுக்கும்
கூறிக்கொள்கிறோம்.

இழந்தவை அனைத்தையும் மீட்டு, விடுதலையை மீட்கும் வரை விடுதலை போராட்டம்
அழிந்து விடப்போவதில்லை “எமது விடுதலை போராட்டத்தின் வழி மாறலாம், இலக்கு
என்றும் மாறப்போவதில்லை” சிங்கள அரசு நினைப்பது போல, அவர்களின் அடக்கு முறைகள்
எம்மை சோர்ந்து போக வைத்துவிட போவதில்லை, மாறாக அது எம் மனதிற்கும்,
சிந்தனைக்கும் வலு சேர்ப்பதாகவே அமையும். அந்த வலுவும், சிந்தனையும்,
செயற்பாடும் எம் தேசம் பிறக்க வழி செய்யும். தமிழின அழிப்பினை நிறுத்தவும்,
சிறிலங்கா அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும் தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை
வலியுறுத்தியும் ஒங்கிக் குரல் கொடுப்போம் என்று பிரித்தானிய இளையோர் அமைப்பு
ஆகிய நாம் உங்களுடன் சேர்ந்து உறுதி எடுத்துக் கொள்கின்றோம்.

You may also like...