மாதந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் மாதந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவையிட்டு பிரித்தானிய தமிழ் இனளயோர் அமைப்பு தனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கின்றது.

அவரது மறைவால் வாடும் அவரது துணைவியார், பிள்ளைகள், மருமக்கள், உற்றார் உறவினர் எல்லோருக்கும் பிரித்தானிய தமிழ் இனளயோர் அமைப்பு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ் மக்களின் விடியலிற்காக இரவு பகலாக தொடர்ந்து போராடிய ஒரு உன்னத தேசிய தலைவரை ஈன்றெடுத்த வீரத்தந்தை அவருக்கு சிரம் தாழ்த்தி பிரித்தானிய தமிழ் இனளயோர் அமைப்பின் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

பிரபாகரனின் பெற்றோர் என்ற ஒரேயொரு காரணத்திற்காகவே அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை மனித உரிமை அமைப்புகளோ உறவினர்களோ பார்வையிடக் கூட சிறிலங்கா அரசு அனுமதி வழங்கவில்லை. உரிய மருத்துவ வசதிகளின்றி இலங்கை இராணுவத்தின் தடுப்புக்காவலில் இறந்தார் என்ற செய்தி தமிழ் இளையோர்களையும் உலகமெங்கும் பரந்துவாழும் அனைத்து தமிழ் மக்களின் மனதையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது.

You may also like...