தாய்மொழி நாளை முன்னிட்டு 8வது வருடமாக பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு வழங்கும் “கற்க கசடற”

“கற்க கசடற கற்பவை கற்றபின். நிற்க அதற்குத் தக” என்ற திருவள்ளுவரின் குறளை பின்பற்றி பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினராகிய நாம் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எம் மதம் மொழி அதன் பெருமைகளை விட்டுக் கொடுக்காது எமது எதிர்கால சந்ததியினருக்கும் எங்கள் தமிழ் மொழியின் அருமை பெருமையை எடுத்துரைத்து எம் தேசிய தலைவரின் கனவை நினைவாக்கும் வண்ணம் தொடர்ந்தும் எமது மொழியை பின்பற்ற அவர்களை ஊக்குவிற்பதே எங்களுடைய இந்ந கற்க கசடற என்னும் போட்டியின் நோக்கமாகும்.
கற்க கசடற தென் மேற்கு, வட மேற்கு, வட கிழக்கு, தென் கிழக்கு ஆகிய நான்கு இடங்களிலும் அரைச்சுற்று இடம் பெற்று அதில் தெரிவான மாணவர்கள் இறுதிசுற்றில் பங்கேற்று அவர்களுடைய திறமைகளை வெளிக்கொண்டு வந்து சிறப்பினை பெற்றார்கள்.
எமது அரும்பெரும் காப்பியங்களையும் தமிழ் சார்ந்த நூல்களையும் பயிலும் பொது தமிழ் மொழியின் வளர்ச்சியும் மாணவர்களின் வளர்ச்சியும் மென்மேலும் வளர்ந்து கொண்டே செல்லும். இரண்டு வயது முதல் பெரியவர்கள் வரை இந்த போட்டியில் பங்குபெறுவது இளையோர்களுக்கு பெரும் உற்சாகத்தையும் உந்துசக்தியையும் கொடுக்கின்றது. முக்கியமாக பெற்றோர்களின் ஆர்வத்தையும் அவர்களின் விடாமுயற்சியையும் பார்க்கும் பொது அளவுகடந்த நம்பிக்கையினை கொடுக்கின்றது.
மொழியை இழந்தவன் அவனது சொந்த அடையாளத்தை இழந்ததற்கு சமனாவான். மொழிதான் ஒரு இனத்தின் அடையாளம்.. மொழி தான் ஒரு இனத்தை ஒன்றுசேர்க்கும்…எப்பொழுது அதனை இழந்துவிடுகின்றோமோ அப்போதே அந்த இனம் சிறுகச் சிறுக அழிகின்றது என்று அர்த்தம். ஒவ்வொரு வருடமும் தாய்மொழி நாளை முன்னிட்டு இடம்பெறும் இப் போட்டியில் நூறிற்கும் அதிகமான தமிழ் பிள்ளைகள் பங்கெடுத்து தமது ஆற்றல்களை வெளிக்கொண்டு வந்தார்கள்.
போட்டியின் இடைவேளையில் தமிழ் மொழி சார்ந்த பல விளையாட்டுக்கள் சிறுவர்களுக்கு வைக்கப்படடன. இறுதியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கேடயமும் ஆறுதல் பரிசாக சக மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு இனிதே நிறைவடைந்தது நிகழ்வு.

You may also like...