Press Release Tamil

விளம்பரப்பலகை பிரச்சாரம்

தமிழீழ தேசிய நினைவெழுச்சி நாளை முன்னிட்டு தமிழ் இளையோர் அமைப்பால் முன்னெடுக்கப்படும் விளம்பரப்பலகை பிரச்சாரம் லண்டன் கொறைடன் பகுதியில் மிகப் பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் ஒத்துழைப்புடன் தமிழ் இளையோர் அமைப்பால் முதன் முதலாக பிரித்தானியாவில் இந்த பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது.

இலங்கை அரசாங்கம் எமது மாவீரர்களின் கல்லறைகளை சிதைக்கலாம், அவர்களின் துயிலுமில்லங்களை தரைமட்டமாக்கலாம் ஆனால் அவர்களின் ஆத்மாவில் இருந்து எழும்பிய அந்த விடுதலை வெறி ஒவ்வொரு தமிழனின் ரத்தத்தில் உறைந்துள்ளது. அதை கட்டுப்படுத்த எத்தனையாயிரம் படையினர் வந்தாலும் முடியாது. இலங்கை அரசாங்கத்தின் பிரச்சார போரை நாம் முறியடித்து அனைத்து தமிழ் மக்களும் தேசிய நினைவெழுச்சி நாளில் கலந்துகொண்டு எங்களின் ஒற்றுமையை நிலைநாட்டி காட்டவேண்டும்.

தேசிய தலைவர் வே பிரபாகரன் அவர்களின் கூற்றுக்கு அமைய

“மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது”

எமது மாவீர செல்வங்களை கார்த்திகை 27 நினைவு கொள்வதோடு மட்டும் நின்று விடாமல் உயிர்விடும் வேளையில் கூட மாவீரர்களின் வாயினில் உதிர்ந்த சொல் தமிழீழம், அந்த வீரவேங்கைகளின் கனவை நிறைவாக்க இறுதி வரை நாம் தொடர்ந்து போராடுவோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

You may also like...

Popular Articles...