வாக்கெடுப்பு (Census) 2011 : பிரித்தானிய ஈழத்தமிழர்களுக்கான அரிய வாய்ப்பு

09 மார்ச் 2011

பத்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கான அடிப்படை தேவைகளை எதிர்காலத்தில் நிவர்த்தி செய்வதே வாக்கெடுப்பின் (Census) நோக்கமாகும். உங்கள் பகுதிகளிலுள்ள பாடசாலைகள், மருத்துவமனைகள், வீடமைப்பு, வீதிகள் மற்றும் அவசர சேவைகள் போன்றனவற்றை எதிர்காலத்தில் பூர்த்தி செய்ய இவ் கணக்கெடுப்பு உதவுகின்றது. முக்கியமான ஒரு விடயம் என்னவெனில் நீங்கள் இவ் படிவத்தை கட்டாயமாக நிரப்பி அதனை அதில் குறிப்பிட்டுள்ள விலாசத்திற்கு அல்லது கணனி மூலமாக அனுப்பி வைக்கவேண்டும், பிரித்தானிய நாட்டின் சட்டப்படி நீங்கள் இதனை கண்டிப்பாக நிரப்பியாகவேண்டும் இல்லாவிடில் ஆயிரம் பவுண்ட்ஸ் (£1000) வரை அபராதம் கட்டவேண்டி நேரும்.

இப் படிவத்தை நீங்கள் 27 மார்ச் 2011 க்கு முதல் இல்லாவிட்டால் அதனை அண்டிய திகதிக்குள் உடனடியாக அனுப்பவேண்டும். கவனத்தில் எடுக்கவும் நீங்கள் அனுப்ப தவறினால் அபராதம் கட்ட நேரிடும்.

தயவு செய்து கேள்வி 15 ஐ கவனிக்கவும், இங்கு உங்கள் குடியுரிமை பற்றி கேட்கப்படவில்லை. இங்கு உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் தரப்பட்டுள்ளது உங்களது அடையாளத்தை வெளிப்படுத்த. இக் கேள்வி நீங்கள் வசித்து வரும் நாட்டின் குடியுரிமை பற்றியது இல்லை.

கேள்வி 15 இல் கேட்கப்படும் கேள்வியானது “உங்கள் தேசிய அடையாளத்தை எவ்வாறு விபரிப்பீர்கள்?” உங்கள் மனதில் நீங்கள் எந்த தேசிய இனம் என்று நினைகின்றீர்களோ அதை தான் இந்த இடத்தில நீங்கள் பதிவு செய்யவேண்டும் அத்தோடு உங்களுடைய தற்போதைய குடியுரிமையையும் குறிப்பிடலாம். இவ் வினாவிற்கு நீங்கள் ஒன்றிற்கு மேற்பட்ட விடை அளிக்கலாம்.

பிரித்தானியாவில் வசிக்கும் மக்கள் சட்டபூர்வமாக பிரித்தானிய குடியுரிமை பெற்றிருந்தாலும் ஸ்காட்லான்ட், வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தை முற்றாக மாறுபட்ட ஒரு வேறு நாடக பார்ப்பது வழமை. 2007 இல் இடம்பெற்ற மதிப்பீட்டில் இரண்டில் மூன்று பங்கு கொண்ட பிரித்தானியர்கள் அவர்களின் தேசிய அடையாளம் இங்க்லீஷ், ஸ்காட்டிஷ் அல்லது வெல்ஷ் என்று வெளிப்படுத்தியிருந்தார்கள். அதனுடைய பிரதியை பார்க்க:

http://www.statistics.gov.uk/downloads/theme_social/Social_Trends39/Social_Trends_39.pdf

உலக நாடுகளில் ஒன்றான தமிழீழத்தின் தமிழ்த்தேசிய அடையாளத்தை பாதுகாப்பதும் அதனை மென்மேலும் மேம்படுத்துவதையும் தமிழ் இளையோர் அமைப்பு தனது கடமையாகவும் குறிக்கோளாகவும் கொண்டுள்ளது.

எம் அமைப்பானது பிரித்தானியாவில் வசிக்கும் இளைய சமுதாயத்தை குறிப்பாக இரண்டாம் சந்ததியினரை கொண்டுள்ளது. நாம் தமிழை பூர்வீகமாக கொண்டிருப்பதாலும் இந்நாட்டில் வாழ்வதன் காரணத்தால் பிரித்தானியர்களாக இருப்பதிலும் பெருமிதம் கொள்கின்றோம்

ஆகவே ஒவ்வொரு ஈழ தமிழர்களையும் நாம் கேட்பது என்னவென்றால் உங்களுடைய தேசிய அடையாளத்தையும் இன அடையாளத்தையும் “Eelam Tamil” என்று அடையாளப்படுத்தவும்,(கேள்வி 15 & 16) அத்துடன் உங்களுடைய தற்போதைய குடியுரிமையையும் குறிப்பிடலாம்.

உங்களின் உதவியோடு கூடிய இவ் சிறு முயட்சியுனுடாக எமது இனத்தின் தனித்துவமான அடையாளத்தை பாதுகாக்க முடியும்.

தமிழில் உதவி கேட்க : 0300 0201 161

You may also like...