சிறிலங்கா கிரிக்கட் அணிக்கு எதிரான எதிர்ப்புப் போராட்டம்

பிரித்தானியா தமிழ் இளையோரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சிறிலங்கா புறக்கணிப்புப்போராட்டம் தற்போது பிரித்தானியாவில் நடைபெறும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்குபற்றும் சிறிலங்கா கிரிக்கட் அணிக்கு எதிராகவும் முன்னெடுக்கபட்டுவருகிறது. இளையோர் அமைப்பினால் தொடக்கப்பட்ட இப்போராட்டம் தமிழ் மக்கள் மத்தியிலும் தமிழர் அல்லாதவர்களிடமும் மிக வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் பிரித்தானிய ஆங்கில ஊடகங்கள் அனைத்தும் எமது போராட்டங்களை முன்னுரிமை கொடுத்து பிரசுரித்து வருகின்றன அதற்கு எம்மாலும் சக அமைப்புகளாலும் முன்னெடுக்கப்பட்ட முதலாவது (uxbridge ) எதிர்ப்பு போரட்டம் சான்றாகும். அதேபோல் இலங்கையிலுள்ள ஊடகங்களும் எமது போராட்டத்தை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றதட்கு அவர்களுடைய ஆக்கங்கள் சான்றாக அமைகின்றது.

அன்பான தமிழ் மக்களே ஒரு நாட்டின் எதிர் காலம் அந்த நாட்டின் இளையோர்கள் கைகளில் தான் தங்கி உள்ளது, இளையோர்களை தட்டி கொடுத்து வளர்ப்பது ஒவ்வொரு தமிழர்களின் கடமை அதிலும் இக்கால கட்டம் மிகவும் முக்கியம் பெறுகின்றது. சிங்கள இனவாதிகளிடம் இருந்து எமது நாட்டை மீட்கும் வரையில் எமது உரிமை போராட்டம் என்பது தொடர்ந்து செல்லவேண்டியது காலத்தின் கட்டாயமாகின்றது.

சிங்கள இனவாத நாட்டினை அனைத்துலக மட்டத்தில் இருந்து காப்பாற்ற இலங்கை அரசாங்கம் மும்முரமாக செயற்பட்டு வரும் இவ்வேளையில் தான் அவர்கள் பயன்படுத்தும் ஒரு துருப்பு சீட்டு இந்த துடுப்பாட்டம் ஆகும். இனப்படுகொலை செய்த ஒரு நாட்டின் பிரதிநிதிகள் தான் இவர்கள், உலகளவில் இலங்கைக்கு நன்மதிப்பை பெற்றுகொடுக்க வந்த தனவான்கள்.

1970 களிலும் 1980 களிலும் தென்னாபிரிக்கா நாட்டின் தேசிய அணிகளை உலகம் புறக்கணித்தது 25 ஆண்டுகளுக்கு பின்பு தான் அவர்களின் தேசிய அணி வெளி உலகத்திற்கு வந்தார்கள் அதேபோல் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் துடுப்பாட்ட வாரியம் சிம்பாவே நாட்டின் தேசிய துடுப்பாட்ட அணியுடனான தனது அனைத்து உறவுகளையும் 2008 ஆம் ஆண்டு நிறுத்தி கொண்டது. இவையாவும் ஏன் நடைபெற்றது? அந்த நாடுகளின் மனித உரிமைகளை நிலை நாட்ட அனைத்துலகம் மேற்கொண்ட முயற்சி ஆகும் இதில் பிரித்தனியாவின் பங்கு முக்கியம் பெற்றது அதேபோல் இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்க எமது கடமைகளை நாம் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் தற்போது உள்ளோம். இப்போராட்டத்தில் அனைத்து தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். புறக்கணிப்பு போராட்டம் சம்மந்தப்பட்ட அனைத்து தொடர்புகளும் எமது இணைய தளத்தில்(www.tyouk.org) கிடைக்கும்.

Leaflets:

http://www.tyouk.org/leaflet.html

Why boycott?

http://www.tyouk.org/boycott/

தொடர்புகட்கு Tel: 07539 444 824

மின்னஞ்சல்: info@tyouk.org

You may also like...