தமிழ் இளையோர் அமைப்பு – பிரித்தானிய கிளைக்கு இன்று வயது பத்து.

வாழ்த்து மடல்
தமிழ் இளையோர்களால் தமிழ் இளையோர்களுக்காக 2004 ஆரம்பிக்கப்பட்ட தமிழ் இளையோர் அமைப்பு – பிரித்தானிய கிளைக்கு இன்று வயது பத்து.
தமிழ் மொழி, வரலாறு, பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் கலை போன்ற அனைத்தையும் புலம்பெயர் இளையோர்கள் அறிவதற்கு பாலமாக மட்டுமில்லாமல் தாயகம் நோக்கி பல செயற்பாடுகளையும் இனிதே செய்து இன்று 10 ஆம் ஆண்டில் காலடி பதிக்கும் தமிழ் இளையோர் அமைப்பு பிரித்தானிய கிளை இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்தும் செயற்பட மனமார வாழ்த்துகிறேன்.
2004 ஆம் ஆண்டு தொடக்கம் செயற்பாட்டாளராகவும் பிரிவுப் பொறுப்பாளராகவும் பணியாற்றியதில் மிகவும் பெருமை கொள்கிறேன். அத்துடன் 14 ஆண்டுகளிற்கு பின் என் தாய் மண்ணில் கால் பதித்து என் கடமையை செய்ய உறவுக்பாலமாக இருந்ததிற்காக இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளையும் கூறிக்கொள்கிறேன்.
தலைவரின் நெறி கண்டு
மாவீரர் வழி சென்று
எம் தாய் மண் மீட்டெடுக்க
மானமுள்ள தமிழராய்
போராடுவோம்…..
– நன்றி –
– தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் –

பழைய உறுப்பினர்

You may also like...