நிபந்தனைகள்

Terms and Conditions English

தயவு செய்து போட்டியின் நிபந்தனைகளை கவனமாக வாசிக்கவும். நீங்கள் இந்த போட்டியில கலந்து கொண்டால் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டதாக கருதபடுவீர்கள்.

1. தமிழ் இளையோர் அமைப்பு அங்கத்தவர்களைத் தவிர, 5 வயதிற்கும் 15 வயதிற்கும் இடைப்பட்ட பிரித்தானியாவை சேர்ந்த எல்லோரும் இப்போட்டியில் பங்குபற்றலாம்.

2. போட்டியில் பங்குபற்றும் பிள்ளைகளுடைய பெற்றோர் இந் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதுடன் பிள்ளைகளும் இந் நிபந்தனைகளை அறிந்து கொள்ளல் அவசியம்.

3. பங்குபற்ற விரும்பும் போட்டியாளர்கள் பூரணமாக பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் £5 சேர்த்து பின்வரும் விலாசத்திற்கு அனுப்பி வைக்கவும்:

'Katka Kasadara-5, TYO UK, 247 Lewisham Way, London, SE4 1XF'

4. விண்ணப்ப படிவங்கள் யாவும் S Thursday, 1st January 2015 முன்பு கிடைக்கப்படல் வேண்டும், இதற்கு பிந்திய விண்ணப்பங்கள் எவையும் ஏற்றுக்கொள்ளபடமாட்டாது விண்ணப்ப படிவங்கள் திருப்பி அனுப்ப படமாட்டாது. ஆதலால் விண்ணப்ப படிவங்களை அனுப்ப முன்பு அதனுடைய பிரதிகளை எடுத்து வைத்து கொள்ளவும்.

5. ஒரு விண்ணப்ப படிவத்தில் ஒருவர் மட்டுமே பங்குபற்றலாம்.
6. தமிழ் இளையோர் அமைப்பில் உள்ள அங்கத்தவர்கள் மட்டுமே இப் போட்டியில் மாற்றங்களை செய்யலாம்.

7. இப் போட்டியில் பங்குபற்றும் போட்டியாளர்களும் அவர்களுடைய பெற்றோரும் இப் போட்டியின் விதிமுறைகளை ஏற்றுக் கொண்டதாக கருதப்படுவீர்கள்.

8. போட்டியாளர்கள் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களுடன் வந்தால் மட்டுமே அனுமதிக்கபடுவார்கள்.

9. போட்டியாளர்கள் தெரிவுசெய்யப்படும்முறை:

நடுவர்களின் முன் எல்லா போட்டியாளர்களும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தவேண்டும். பிரித்தானிய தமிழ் சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் நடுவர்களாக பங்குபற்றுவார்கள். பலவிதமான தகுதிகளின் அடிப்படையில புள்ளிகள் இடப்பட்டு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கபடுவார்கள். கூடுதலான புள்ளிகளைப் பெற்றவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவர். தலைமை நடுவரின் தீர்ப்பே இறுதியானது. தேவைப்பட்டால் போட்டியாளர்கள் தமிழ் இளையோர் அமைப்பின் அங்கத்தவர் ஒருவரால் தொடர்புகொள்ளப்படுவர்.

போட்டியாளர்கள் பின்வரும் பிரிவுகளில் ஒன்றில் பங்குபற்றலாம்:

 5 வயதுக்குட்பட்டவர்கள்;
 6 - 7 வயதுக்குட்பட்டவர்கள்;
 8 - 9 வயதுக்குட்பட்டவர்கள்;
 10 - 12 வயதுக்குட்பட்டவர்கள்;
 13 - 15 வயதுக்குட்பட்டவர்கள்.

போட்டியாளர்கள் மேற்குறிப்பிடப்பட்ட வயதெல்லையின் ஒரு பிரிவுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள இடத்திற்கு முதலாவது சுற்றுப் போட்டிக்கு அழைக்கப்படுவார்கள்.

ஓவ்வொரு பிரிவிலும் 3 போட்டியாளர்கள் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இறுதிசுற்றுப் போட்டியில் இறுதி வெற்றியாளர்கள் ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

10. பின்வருபவைகள் பரிசுகளாக வழங்கப்படும்:

 எல்லாப்போட்டியாளர்களுக்கும் பங்குபற்றியதற்கான சான்றிதழ்;
 முதற்சுற்று போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கான பதக்கங்கள்;
 இறுதிசுற்றுப் போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கான பரிசுக்கோப்பைகள்.

11. மேற்குறிப்பிட்டபடி வழங்கப்பட்ட பரிசுகள் மாற்றப்படமாட்டாது.

12. போட்டியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டபின்பு, அவர்களை தொடர்பு கொண்டு, அப் பரிசுகளை அவர்களுக்கு வழங்கமுடியாதபட்சத்தில், அடுத்தவர் பரிசிற்கு தேர்ந்தெடுக்கபடுவர்.

13. நடுவரின் தீர்ப்பே இறுதியானது வேறு அபிப்பிராயங்கள் எவையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. வெற்றிபெறாத போட்டியாளர்களின் காரணங்கள் எதுவும் அறிவிக்கபடமாட்டாது.

14. போட்டியாளர்கள் இவ்விதிகளை மீறும்பட்சத்தில் வெற்றியாளர்களின் பரிசில்கள் மீளபெறப்படும் உரிமை தமிழ் இளையோர் அமைப்பின் அங்கத்தவர்கட்கு மட்டுமே உடையது.

15. போட்டிக்குரிய நிபந்தனைகளை மாற்றும் உரிமை அல்லது போட்டியை ரத்து செய்யும் உரிமை தமிழ் இளையோர் அமைப்பு அங்கத்தவர்களுக்கு மட்டுமே. அப்படி நடக்கும் பட்சத்தில் www.tyouk.org என்ற இணையதளத்தில் அறிய தரப்படும்.

16. விண்ணப்ப படிவம் தபாற்சேவை காரணமாக காலதாமதமாக கிடைத்தால் அல்லது தொலைந்தால் தமிழ் இளையோர் அமைப்பு பொறுப்பேற்கமாட்டாது. அனுப்பியதற்குரிய ஆதாரம் இருந்தாலும் எங்களுக்கு கிடைத்ததற்குரிய ஆதாரம் வேண்டும்.

17. எல்லா போட்டியாளர்களும் குறிப்பிட்ட நேரத்திற்கு சமூகமளிக்க வேண்டும்.
துவறினால் போட்டியிலிருந்து விலக்கப்படுவார்கள்.

18. போட்டிவிதிமுறைகள் இங்கிலாந்து சட்ட வரையறைக்குட்பட்டது.

19. மேலதிக விபரங்களுக்கு பின்வரும் மினஞ்சலில் தொடர்புகொள்ளவும்: katkakasadara@tyouk.org.

20. தொலைபேசியில் மேலதிக விபரங்களுக்கு 07717 061055

PDF file

தயவுசெய்து கீழ் காணும் விண்ணப்ப படிவத்தையும் அதனுடன் சேர்த்து நீங்கள்/உங்களது பிள்ளைகள் படிக்கவேண்டிய திருக்குறள்கள், தொல்காப்பியம் மற்றும் கொன்றைவேந்தன் ஆகியன உங்கள் கணனியில் தரவிறக்கம் செய்யக்கூடிய விதத்தில் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு/உங்களது பிள்ளைகளுக்கு தொல்காப்பியத்தின் பொருள் விளங்கவேண்டுமென்ற எண்ணத்தில் தான் அதனை நாம் இங்கு இணைத்துள்ளோம், அதனை மனப்பாடம் செய்து எங்களுக்கு சொல்ல தேவை இல்லை.


Deadline for entry is SUNDAY, 28TH DEC 2015

வயதெல்லைகள்

  • 05 tajpw;F cl;gl;lth;fSf;F 1-3 jpUf;Fws;fSk;; kw;Wk; Mj;jpR+b 1-5
  • 06 - 07 tajpw;F cl;gl;lth;fSf;F 1-4 jpUf;Fws;fSk; (4 ,d; nghUSk;) kw;Wk; Mj;jpR+b 1-12
  • 08 - 09 tajpw;F cl;gl;lth;fSf;F 1-6 jpUf;Fws;fSk;; (4-6 nghUSk;) kw;Wk; njhy;fhg;gpa vOj;jjpfhuk; 1-7
  • 10 - 12 tajpw;F cl;gl;lth;fSf;F 1-8 jpUf;Fws;fSk;; (4-8 nghUSk;) kw;Wk; njhy;fhg;gpa vOj;jjpfhuk; 1-10
  • 13 - 15 tajpw;F cl;gl;lth;fSf;F 1-10 jpUf;Fws;fSk; (4-10 nghUSk;) kw;Wk; njhy;fhg;gpa vOj;jjpfhuk; 1-13

For further information, do not hesitate to contact us: katkakasadara@tyouk.org,
0777 034 3375