6ஆவது தடவையாக 'கற்க கசடற'

Nov 24, 2014

Image

தமிழ் இளையோர் அமைப்பு ஆண்டு தோறும் நடத்தி வரும் திருக்குறள் போட்டி இம்முறை தொல்காப்பியம் ஆத்திசூடி போன்ற எமது சங்ககால இலக்கியங்களை உள்ளடக்கிய ஒரு போட்டி நிகழ்வாக நடைபெறுகின்றது.

தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே. இதனை முதல்நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழிநூல்கள் தோன்றின. அதேபோல் கொன்றைவேந்தன் என்பது சங்க காலத்தில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் இருத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது கொன்றை வேந்தன்.


இவ் நூல்கள் எமது காலத்துடன் அழியக்கூடிய சான்றுகள் உள்ளன இதனை நாம் எமக்கு பிறகு வரும் சந்ததியினர் பயன்படுத்தவும் அதன் முக்கியதுவத்தை எடுத்துக்காட்டவும் இளையோர் அமைப்பாகிய நாம் தலையாய கடமைப்பட்டுள்ளோம். இற்றைக்கு பல ஆண்டுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகத்தில் தோன்றிய தமிழ் மொழி எல்லாத்துக்கும் தாயாக இருந்துள்ளது. அந்த தாயை நினைவுகூருமுகமாக இவ் போட்டி நிகழ்வுகள் நடைபெறுகின்றது. இவ் போட்டி நான்கு வயது பிரிவிவாக இடம்பெற்று கடைசியில் இறுதிச்சுற்றும் பரிசளிப்பு விழாவும் இடம்பெறும். பரிசளிப்பு விழாவில் தமிழ் இளையோர் அமைப்பின் நடனம் பேச்சு கவிதை மற்றும் தமிழ் பாடசாலைகளின் மாணவர்களின் நடனம் பாட்டு என்பனவற்றுடன் மிக சிறப்பாக இடம்பெறவுள்ளது.

இளையோர் அமைப்பிற்கு எழு வருடமாக ஒத்துழைப்பு வழங்கி வரும் நீங்கள் இவ் நிகழ்ச்சிக்கும் வருகை தந்து எமது சிறு முயற்சிகளை ஊக்கிவித்தும் ஆதரவும் தரவேண்டி நிற்கின்றோம். உங்கள் வரவு எமது நிகழ்வினை சிறப்புற வைக்கும்.

நன்றி

இப்படிக்கு
கல்வி மற்றும் வேலைத்துறை சபை
தமிழ் இளையோர் அமைப்பு ஐக்கிய இராச்சியம்

More

தயவுசெய்து கீழ் காணும் விண்ணப்ப படிவத்தையும் அதனுடன் சேர்த்து நீங்கள்/உங்களது பிள்ளைகள் படிக்கவேண்டிய திருக்குறள்கள், தொல்காப்பியம் மற்றும் கொன்றைவேந்தன் ஆகியன உங்கள் கணனியில் தரவிறக்கம் செய்யக்கூடிய விதத்தில் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு/உங்களது பிள்ளைகளுக்கு தொல்காப்பியத்தின் பொருள் விளங்கவேண்டுமென்ற எண்ணத்தில் தான் அதனை நாம் இங்கு இணைத்துள்ளோம், அதனை மனப்பாடம் செய்து எங்களுக்கு சொல்ல தேவை இல்லை.


Deadline for entry is Sunday, 28th Dec 2015

வயதெல்லைகள்

  • 05 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 1-3 திருக்குறள்களும்; மற்றும் ஆத்திசூடி 1-5

  • 06 - 07 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 1-4 திருக்குறள்களும் (4 இன் பொருளும்) மற்றும் ஆத்திசூடி 1-12

  • 08 - 09 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 1-6 திருக்குறள்களும்; (4-6 பொருளும்) மற்றும் தொல்காப்பிய எழுத்ததிகாரம் 1-7

  • 10 - 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 1-8 திருக்குறள்களும்; (4-8 பொருளும்) மற்றும் தொல்காப்பிய எழுத்ததிகாரம் 1-10

  • 13 - 15 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 1-10 திருக்குறள்களும் (4-10 பொருளும்) மற்றும் தொல்காப்பிய எழுத்ததிகாரம் 1-13

For further information, do not hesitate to contact us: katkakasadara@tyouk.org,
0777 034 3375