பாலவர்ணம் சிவகுமார் மீதான கொடூர படுகொலை

29.10.2009 அன்று நடந்த பாலவர்ணம் சிவகுமார் மீதான கொடூர படுகொலையை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது.

சிறீலங்கா காவல்துறை மற்றும் இராணுவ அதிகாரிகளினால் மனநோய்க்கு உள்ளான தமிழ் இளைஞன் கடலில் தாக்கப்பட்டு கொலை செய்யப்ட்டது எங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

அத்துடன் தமிழ் இளையோருக்கு எதிரான படுகொலை மற்றும் வன்முறைகளில் சிறீலங்கா அரசாங்கம் மற்றும் அதன் அமைப்புக்களுக்கு நீண்ட வரலாறு இருக்கின்றது, முக்கியமாக இந்த வருடம் நடந்த இறுதி கட்ட போராட்டத்தில் இடம்பெற்ற படுகொலைகள் தற்போது நாசி போன்ற வதைமுகாம்களில் மேற்கொள்ளும் மனிதாபிமானம் அற்ற செயல்கள்.

தடியாட்கள் அவர் கெஞச கெஞச சிவகுமாரனை தாக்கிய காட்சி தமிழ் மக்களை கவலைக்கு உள்ளாக்கியது மட்டும் இன்றி இளையோர்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

கொழும்பு பம்பலப்பிட்டியா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உ ள்ள கடலில் சிவகுமாரன் வற்புறுத்தி இறக்கப்பட்டார். இந்த சம்பவம் சிங்கள இராணுவத்தால் தமிழ் ஆண்கள் நிர்வாணமாக கொலை செய்யப்பட்டதை பிரித்தானிய சனல் 4 தொலைகாட்சி காண்பித்த பின்பு நடைபெற்றுள்ளது. இந்த மாதிரியான சம்பவங்கள் தமிழ் மக்கள் நிம்மதியாக சிறீலங்காவில் வாழ முடியாது என்பதை எங்களுக்கு சுட்டிக்காட்டுகின்றது.

சிறீலங்காவின் தமிழ் இளையோருக்கு எதிரான அடக்குமுறையை எதிர்த்து நாம் தொடர்ந்து போராடுவோம். இந்த துன்பகரமான சம்பவத்தால் கவலையில் இருக்கும் சிவகுமாரின் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

You may also like...