5ஆவது வருடமாக தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா

5ஆவது வருடமாக லண்டன் Southall பகுதியில் தமிழ் இளையோர் அமைப்பினரால் சனிக்கிழமை மதிய வேளை தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பெற்றது. தேசியக்கொடி ஏற்றல் நிகழ்வுகளுடன் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா ஆரம்பிக்கப்பட்டது. தமிழீழத் தேசியக்கொடியினை இளையோர் அமைப்பின் பிரித்தானியப் வடமேற்கு பொறுப்பாளர் செல்வன் ஜேய் அவர்கள் ஏற்றி விழாவினை தொடக்கி வைத்தார்கள்.

தாயக முறைப்படி முற்றத்தில் கோலமிட்டு முதலில் பொங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் இளையோர் அமைப்பின் உறப்பினர்களும் அவர்களின் பெற்றோர்களும் உறவுகளும் கூடிநின்று மண்பானையில் அரிசியிட்டு பொங்கலை ஆரம்பித்து வைத்தனர். சிறிது நேரத்தில் பொங்கலோ பொங்கல் என்று அனைவரும் ஒலி எழுப்பி பொங்கலின் உற்சாகத்தை கொண்டாடினர். அதன் பின்பு சிற்றுண்டி வகைகளும் பொங்கலும் அனைத்து உறவுகளுக்கும் வழங்கப்பட்டது.