NHS Organ Donor Register

But only 29% of Britain have joined the Organ Donor Register. More than 10,000 people in the UK currently need a transplant. Of these, 1000 each year – that’s three a day – will die waiting as there are not enough organs available.
Some facts:
- Less than 2% of South Asian and Black communities are on the Organ Donor Register but are three times more likely to need an organ transplant if of Black or South Asian origin than the UK average.
- People of Black or South Asian origin wait two times longer for a kidney transplant due to a lack of suitable organs for the Black/ South Asian community.
- A transplant is much more likely to be successful if the donor and recipient have the same ethnic origin.
Please help us to turn people’s good intentions about organ donation into action by registering on the NHS Organ Donor Register.
தானத்தில் சிறந்த தானம் அங்க தானம்
அதி உன்னத அர்ப்பணிப்பின் 25ஆம் ஆண்டின் நினைவிலும் குட்டிமணி அண்ணா அவர்களின் நினைவையும் தாங்கி பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு, பிரித்தானிய தேசிய சுகாதார அமைப்புடன் சேர்ந்து உடல் உறுப்பு தான செயல் திட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளது.
இத்திட்டமானது இன்று திகதி தொடக்கம் எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும்.
இன்று அதி உன்னத அர்ப்பணிப்பின் உச்ச கட்ட நாள், எமது வீரர்கள் தங்களது உடலையே தாய் நாட்டிற்காக கொடுத்த நாள், எமது இருப்பை உறுதி செய்ய தங்களது இருப்பை இல்லாதொழித்தவர்களின் அற்புத நாள்.
இந்நாளில் தொடங்கும் இந்த செயல் திட்டம் குட்டி மணி அண்ணா இறந்த தினமான ஜூலை 25 நிறைவு பெறும். குட்டி மணி அண்ணா ஏப்ரல் 5, 1981 ஆம் ஆண்டு சிங்கள காவல்துறையால் கைது செய்யப்பட்டார் பின்பு அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பளித்தது.
நீதிமன்றத்தில் அவரது இறுதி விருப்பத்தை கேட்கும் பொது குட்டி மணி அண்ணா, “எனது மரண தண்டனைக்கு முதல் என் கண்ணை எடுத்து கண் தெரியாத ஒரு தமிழனுக்கு கொடுக்கவும். சுததந்திர தமிழீழத்தை காண நான் உயிரோடு இருக்க மாட்டேன் எனது கண்களாவது அதனை காணட்டும்” என்று சொன்னார்.
அதன் பிற்பாடு இலங்கை அரச படைகள் குட்டி மணி அண்ணாவின் கண்களை தோண்டி எடுத்து தங்களது சப்பாத்து காலால் அதனை மிதித்தார்கள். அந்த இரத்த நினைவுகளை சுமந்து நாம் ஒவ்வொருவரும் எமது எதோ ஒரு உடல் உறுப்பினையாவது நாம் இறந்த பின்பு தானம் கொடுக்க முன்வர வேண்டும்.





