Showing: 11 - 20 of 27 RESULTS
Press Release Tamil

தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவு

  இத்தனை காலமாக புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர் எவ்வளவோ போராட்டங்கள் செய்து வந்த போதிலும் தாய் தமிழ் நாடு மக்கள் அமைதியாகவும் பாராமுகமாகவும் இருந்தது ஒரு குறையாகவே இருந்து வந்தது. எங்கள் அவலத்தை பற்றிய விழிப்புணர்வோ அதை ஒட்டிய எழுச்சியோ கோடி கணக்கிலுள்ள தாய் தமிழ் நாட்டு மக்கள் இடையில் இல்லாமை என்பது ஏமாற்றத்தையே இத்தனை காலமும் தந்தது. ஆனால் அக்குறையை தீர்த்து தமிழ் நாடு முழுவதும் ஈழ உணர்வு பற்றி எரியும் பொருட்டு …

Press Release Tamil

பருதி அண்ணா அவர்களுக்கு வீரவணக்கம்

நவம்பர் 10, 2012 எண்பதுகளில் தொடங்கி இற்றை வரை தனது வாழ்நாளில் தேசியத்துக்காக உழைத்த ‘பருதி‘ என்று அழைக்கப்படும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்கு குழுவின் பொறுப்பாளர் திரு. நடராஜா மதீந்திரன் அவர்கள் சென்ற வியாழக்கிழமை, நவம்பர் 08, 2012 அன்று பிரான்சின் பாரீஸ் நகரில் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தி எம்மைத் துயரில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் புலம்பெயர் தேசமும் இன்று கண்ணீரில் மூழ்கியுள்ளது. மே மாதம் 2009 க்கு பிறகு புலம்பெயர் தேசத்தில் தமிழ் மக்களின் எழுச்சி என்பது …

Press Release Tamil

முள்ளிவாய்க்காள் 3 ஆம் நினைவில் விடுதலைத் தீயை ஏந்தி நினைவு வணக்கம்

இன்றைய நாளில் தமிழின படுகொலை நடந்து மூன்று வருடங்கள் கடந்த நிலையில், நம் மனதில் நாம் சுமந்துகொண்டிருக்கும் அதன் வலியையும், இன்றும் எம் மண்ணும், மக்களும் அனுபவிக்கும் மாறாத காயங்களையும் நினைத்தும், நெஞ்சில் இன்றும் என்றும் விடுதலைத் தீயை ஏந்தி நினைவு வணக்கம் செலுத்தும் நாங்கள் தமிழ் இளையோர். மூன்று வருடங்களுக்கு முன் தமிழ் இனம் என்றுமே காணாத ஒரு பேரழிவை சந்தித்திருநத நாள், கொத்துகுண்டுகள் மற்றும் பாரிய ஆயதங்கள் கொண்டு எம்மினத்தை பாதுகாப்பு வலயம் என்று …

Press Release Tamil

யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் செயலார் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்குறோம்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நினைவுகொள்ளும் இவ் வேளையில் ஒரு மிருகத்தனமான தாக்குதலை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தமிழ் மாணவன் மீது நடத்தப்பட்டுள்ளது. பரமலிங்கம் தர்சானந் கலை பிரிவில் மூன்றாம் ஆண்டு கல்வியையும் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார், இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினால் இயக்கப்படும் ஒரு கும்பல் மூலம் இரும்பு கம்பிகள் கொண்டு தாக்கப்பட்டு தலையில் காயங்களுடன் தீவிர மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தனது சக மாணவர்களுடன் இணைந்து இலங்கை இராணுவத்தின் தடைகளைகளை மீறி …

Press Release Tamil

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மீது திட்டமிட்ட தாக்குதல்

யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் மாணவ மன்றத் தலைவர் திரு தவபாலன், 24 வயது, 16/10/2011 அன்று பிற்பகல் 2 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதர்கள் பலமான தாக்குதல் நடாத்தி இருக்கின்றார்கள். இலங்கை ராணுவமும் அதனுடன் இயங்கும் அதன் ஒட்டுண்ணிகளும் என சந்தேகிக்கப்படும் இவர்கள் திரு தவபாலனை பின் தொடர்ந்து சென்று கூர்மையான இரும்புக் கம்பிகளால் யாழ்ப்பாணம் கந்தர்மடம் அருகே இவ் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டிருக்கின்றார்கள். திரு தவபாலன் அவர்கள் கிரிஸ் மனித அச்சுறுத்தலுக்கு …

Press Release Tamil

சிறீலங்கா கிறிக்கெட்டைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் – குழப்பம் விளைவிக்க முயன்ற சிங்களவர்கள்

தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறீலங்கா அரசாங்கத்தின் கிறிக்கெட் அணியைப் புறக்கணிக்குமாறு கோரி பிரித்தானிய தமிழ் இளையோர் நேற்று (28-06-2011) லண்டன் ஓவல் மைதானத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். காலை 11:00 மணிமுதல் கிறிக்கெட் பார்க்கச் சென்ற மக்கள் மத்தியில் துண்டுப் பிரசுரங்களை இளையோர்கள் வழங்கல் செய்துகொண்டிருக்க, இளையோர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக மாலை 5:00 மணி முதல் மக்களும் இணைந்து கொண்டனர். தமிழீழத் தேசியக் கொடியைத் தாங்கியவாறு பிரித்தானிய தமிழ் இளையோர்கள் துண்டுப் பிரசுரங்களை வழங்கிக்கொண்டிருந்தபோது அங்கு …

Press Release Tamil

இளந்தளிர் 2011 – ஈழத்தமிழரின் அடையாளம் மீட்பு

ஜக்கியராச்சிய தமிழ் இளையோர் அமைப்பினாரால் நேற்று(19.06.2011) இளந்தளிர் நிகழ்வு நான்காவது தடவையாக “இளந்தளிர் 2011” எனும் பெயரில் மண்டபவம் நிறைந்த மக்களுடன் மேற்கொள்ளப்பட்டது. மாலை 4 மணி தொடக்கம் “ஈழத்தமிழரின் அடையாளம்” கண்காட்சி மக்கள் பார்வையிற்காக வைக்கப்பட்டிருந்தது. இதில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நேரில் கண்ட சாட்சியால் வரையப்பட்ட முள்ளிவாய்கால் சோகக் காட்சிகள், தமிழீழ மண்ணினால் வரையப்பட்ட தமிழீழ வரைபடம், இறுதிக்கட்ட போரில் முள்ளிவாய்காலில் உயிர்நீத்த மக்களின் இரத்தம் உறைந்த மண், பழைய காலத்தில் உணவு செய்முறைகளை குறித்து …

Press Release Tamil

இப்போதாவது பிரித்தானியா சிறீலங்காவின் போர் குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்

சனல் 4 தொலைக்காட்சி; 2009 சிறீலங்காவில் நடந்த கடைசி கட்டப் போரில் இடம்பெற்ற உண்மை சம்பவத்தை “சிறீலங்காவின் கொலைக்களம்” என்ற விவரணக்காட்சி மூலம் ஒளிபரப்பியதை ஜக்கியராச்சிய தமிழ் இளையோர் அமைப்பு வரவேற்கின்றது. நடந்த பயங்கரத்தை எதுவித இணக்கமும் இன்றி ஒளிபரப்பியது ஒரு திறமையான புலனாய்வு ஊடகத்திற்கு உதாரணம். இந்த விவரணக்காட்சி போர் குற்றம் மற்றும் மனிதநேய குற்றம் ஆகியவற்றிற்கு அழிக்க முடியாத ஆதாரம். அதுமட்டுமின்றி கொடுமைகள் உலகில் எந்த மூலையில் நடந்தாலும் அதை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டியது …

Press Release Tamil

சிறிலங்கா கிரிக்கட் அணிக்கு எதிரான எதிர்ப்புப் போராட்டம்

பிரித்தானியா தமிழ் இளையோரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சிறிலங்கா புறக்கணிப்புப்போராட்டம் தற்போது பிரித்தானியாவில் நடைபெறும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்குபற்றும் சிறிலங்கா கிரிக்கட் அணிக்கு எதிராகவும் முன்னெடுக்கபட்டுவருகிறது. இளையோர் அமைப்பினால் தொடக்கப்பட்ட இப்போராட்டம் தமிழ் மக்கள் மத்தியிலும் தமிழர் அல்லாதவர்களிடமும் மிக வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் பிரித்தானிய ஆங்கில ஊடகங்கள் அனைத்தும் எமது போராட்டங்களை முன்னுரிமை கொடுத்து பிரசுரித்து வருகின்றன அதற்கு எம்மாலும் சக அமைப்புகளாலும் முன்னெடுக்கப்பட்ட முதலாவது (uxbridge ) எதிர்ப்பு போரட்டம் சான்றாகும். …

Press Release Tamil

வாக்கெடுப்பு (Census) 2011 : பிரித்தானிய ஈழத்தமிழர்களுக்கான அரிய வாய்ப்பு

09 மார்ச் 2011 பத்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கான அடிப்படை தேவைகளை எதிர்காலத்தில் நிவர்த்தி செய்வதே வாக்கெடுப்பின் (Census) நோக்கமாகும். உங்கள் பகுதிகளிலுள்ள பாடசாலைகள், மருத்துவமனைகள், வீடமைப்பு, வீதிகள் மற்றும் அவசர சேவைகள் போன்றனவற்றை எதிர்காலத்தில் பூர்த்தி செய்ய இவ் கணக்கெடுப்பு உதவுகின்றது. முக்கியமான ஒரு விடயம் என்னவெனில் நீங்கள் இவ் படிவத்தை கட்டாயமாக நிரப்பி அதனை அதில் குறிப்பிட்டுள்ள விலாசத்திற்கு அல்லது கணனி மூலமாக அனுப்பி வைக்கவேண்டும், பிரித்தானிய நாட்டின் …